Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கருங்கல் அருகே நர்சிங் மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே பாலப்பள்ளம் இடையன்விளையைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் பபின், (வயது 19). இவர், களியக்காவிளை...

கருங்கல் அருகே பாலப்பள்ளம் இடையன்விளையைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் பபின், (வயது 19).
இவர், களியக்காவிளையில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு வீட்டில் இருந்து செல்வது வழக்கம். விடுமுறை தினங்களில் வீட்டின் பக்கத்தில் உள்ள கோழிக்கடை ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று காலை அந்த பகுதியில் உள்ள கோழிக்கடைக்கு வேலைக்கு சென்றார். பிறகு கடை முன்பு பபின் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட பபின் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல் போலீசில் அவரது தாயார் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், பபின் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலை மாணவியிடம் கூறி உள்ளார். காதலுக்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பபின் மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்த சம்பவத்தை தனது தாயாரிடமும் கூறி உள்ளார். பபினை தாயார் சமாதானம் செய்துள்ளார். ஆனால் சமாதானம் அடையாத பபின் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்