Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சி, வயக்கரை செவன் ஸ்டார் இளைஞர்கள் நடத்திய 7-வது ஆண்டு மாபெரும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது

மணவாளக்குறிச்சி, வயக்கரை பகுதி செவன் ஸ்டார் இளைஞர்கள் நடத்திய 7-ம் ஆண்டு தீபாவளி திருநாள் விழா அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் க...

மணவாளக்குறிச்சி, வயக்கரை பகுதி செவன் ஸ்டார் இளைஞர்கள் நடத்திய 7-ம் ஆண்டு தீபாவளி திருநாள் விழா அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் கொண்டாடப்பட்டது.
முதல் நாள் விளையாட்டு போட்டிகளும், 2-ம் நாள் மரம் ஏறுதல் போட்டி, வினாடி வினா போட்டிகள் மற்றும் சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
3-ம் நாளான தீபாவளி அன்று காலை 7 மணிக்கு கோலப்போட்டி, 9 மணிக்கு சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள், காலை 11 மணிக்கு உறியடித்தல் போட்டிகளும் நடைபெற்றன.
மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருந்தினை மணவாளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்கராஜ் துவக்கி வைத்தார்.
மாலை 6 மணிக்கு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு விஜய் டிவி புகழ் பிரபு மற்றும் குழுவினரின் மாபெரும் திரைப்பட மெல்லிசை விருந்து நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கு செவன் ஸ்டார்ஸ் இளைஞர்கள் சார்பில் “பாப் காரன்”, “பஞ்சு மிட்டாய்” மற்றும் ஐஸ் கிரீம் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்