மணவாளக்குறிச்சி தருவையில் “யங் பிரதர்ஸ்” குழுவினரின் 19-ம் ஆண்டு தீபாவளி திருநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று மாலை ...
மணவாளக்குறிச்சி தருவையில் “யங் பிரதர்ஸ்” குழுவினரின் 19-ம் ஆண்டு தீபாவளி திருநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தீபாவளி அன்று மாலை 7 மணி அளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. நிகழ்ச்சிக்கு மணவாளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.

வழக்கறிஞர் எஸ்.பி.மணிகண்டன், குட்டிராஜன், கே.பி.அன்பு கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசுகளை காவல் ஆய்வாளர் தங்கராஜ் வழங்கினார். பரிசு வழங்கும் நிகழ்ச்சியினை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தீபாவளி திருநாள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை “யங் பிரதர்ஸ்” குழுவினர் செய்திருந்தனர்.
















No comments