Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்த தீக்காயம் அடைந்த பெண் மரணம்

மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்தவர் பூவம்மை (வயது 55). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இவரது வீட்டில் மின்சாரம் இல்ல...

மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்தவர் பூவம்மை (வயது 55). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இவரது வீட்டில் மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணை விளக்கு பற்ற வைத்திருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பூவம்மை விளக்கு பற்ற வைத்திருந்தபோது, எதிர்பாராத விதமாக மண்ணெண்ணை விளக்கின் மீது தவறி விழுந்தார்.
இதில் அவரது சேலையில் தீபிடித்து, உடலில் பலத்தை தீக்காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டது. அனாலும் சிகிட்சை பலனின்றி பூவம்மை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், பூவம்மையின் உடலை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்