மணவாளக்குறிச்சியின் அடையாளமாக விளங்கிய வள்ளியாறு, இன்று புதர் மண்டி மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாதபடி உள்ளது. ஒருகாலத்தில் மணவாளக்குற...
மணவாளக்குறிச்சியின் அடையாளமாக விளங்கிய வள்ளியாறு, இன்று புதர் மண்டி மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாதபடி உள்ளது. ஒருகாலத்தில் மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு அன்றாடம் தண்ணீர் பயன்பாட்டை வழங்கிய வள்ளியாற்றின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது.

புதர்மண்டி கிடக்கும் வள்ளியாற்றை சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது “கிளீன் வள்ளியாறு” திட்டம். இந்த திட்டத்தினை ஒருங்கிணைத்தவர் மணவாளக்குறிச்சி சமூக நல ஆர்வலர் “மணவை சிங்கம்”
அவரின் முயற்சியின் பலனாக வருகிற ஞாயிறு (06-10-2019) மாலை 3 மணி அளவில் மணவாளக்குறிச்சி கே.எஸ்.வி. திருமண மண்டபத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு முக்கிய தலைவர்கள், சமூக நல ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் வருகை தர உள்ளனர். “ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் ஆகியற்றிற்கு அப்பாற்பட்டு வள்ளியாற்றை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைவோம்” என்ற அடிப்படையில் மக்களை ஒன்றிணைத்து, “கிளீன் வள்ளியாறு” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வரும் மணவை சிங்கம் அவர்களை பலர் பாராட்டி வருகின்றனர். ஆலோசனை கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள +91 88708 60698 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
பொதுமக்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என இதன்மூலம் கேட்டுகொள்கிறோம்.
















No comments