Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

ஓவியம் வரைவதில் அசத்தும் மணவாளக்குறிச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன்

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மன்சூர். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஷாருக் கான் (வயது 14) என்ற மகனும், ஒரு மகளும...

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மன்சூர். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஷாருக் கான் (வயது 14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஷாருக் அம்மாண்டிவிளை அருகே உள்ள மாவிளை ஆதித்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார்.
ஷாருக் சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். ஏதாவது பத்திரிகையில் வரும் படங்களை பார்த்தால் அதை அப்படியே அச்சு அசலாக வரைந்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பார். ஓவியம் வரைய அவர் எந்தவிதமான பயிற்சிகளையும் மேற்கொண்டது கிடையாது.
இயற்கையாகவே அவர் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் கொண்டுள்ளார். பள்ளியில் நடைபெறும் ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளார்.
ஒருமுறை அவருடைய அப்பாவை பார்த்தே ஓவியமாக தீட்டியுள்ளார். அதை பார்த்த அவர், மகனை பார்த்து ஆச்சரியப்பட்டார். தன் மகனுக்குள் ஒளிந்து கிடக்கும் கலைஞனை வெளிக்கொண்டு வர, அவர் முயற்சி எடுத்துள்ளார். பள்ளி படிப்பு முடிந்து, மேற்படிப்பாக ஷாருக்கை டிராயிக் மற்றும் 3டி அனிமேஷன் துறையில் கால் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
விஜய், அஜீத், பாகுபலி புகழ் பிரபாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல திரையுலக பிரபலங்களை வரைந்துள்ளார். காய், கனிகளை ஒரிஜினல் எது, ஓவியம் எது என்ற சந்தேகம் வரும் அளவிற்கு தத்துரூபமாக வரைந்து வைத்துள்ளார்.
அவருடைய ஓவியங்களை பார்க்கும் அனைவருமே, வியந்து பாராட்டி வருகின்றனர். பள்ளியிலும் ஆசிரியர்கள் ஷாருக்கை ஓவியம் வரைவதில் உள்ள ஆர்வத்தை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி பகுதியில் ஒரு சிறந்த ஓவியக் கலைஞன் உருவாகிறான் என்றால் அது மிகையில்லை.
ஷாருக் கானின் தந்தை மன்சூர்

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்