Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாகர்கோவிலில் டெங்கு விழிப்புணர்வை வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் மனித சங்கிலி

தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பலர் இறந்துள்ளதாக தெரிகிறது. குமரி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்ப...

தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பலர் இறந்துள்ளதாக தெரிகிறது. குமரி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிறப்பு பிரிவு திறக்கப்பட்டு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க குமரி மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள் நாகர்கோவில் பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியினை நடத்தி வருகின்றனர்.
மேலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் அறிவுரையின் பேரில் நேற்று காலை நாகர்கோவில் மாநகராட்சியும், வெட்டூர்ணிமடம் இந்து வித்யாலயா பள்ளியும் இணைந்து டெங்கு விழிப்புணர்வு மற்றும் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவியர் மனித சங்கிலி நடந்தப்பட்டது.

மனித சங்கிலி பள்ளியில் இருந்து கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் வரை நின்றனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர நல அதிகாரி கிங்சால், சுதாகர ஆய்வாளர் ராஜேஷ், சுதாகர மேற்பார்வையாளர் ஐயப்பன் மற்றும் இந்து வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் இருந்து மாணவ, மாணவிகள் பேரணியாக பள்ளி சென்றனர். பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான கண்காட்சி வைத்திருந்தனர். அதனை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியில் படிக்கும் 615 மாணவ, மாணவியரும் தூய்மை தூதுவராக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாநகராட்சி நல அதிகாரி டாக்டர் கிங்சால் அடையாள அட்டை வழங்கினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்