நியூயார்க் அருங்காட்சியகத்தில் தங்கத்தில் உருவாக்கப்பட்ட கழிப்பறை திறப்பு பொதுமக்கள் பயன்படுத்தலாம் லட்சங்களிலும், கோடிகளிலும் புரள்கிற பெரு...
நியூயார்க் அருங்காட்சியகத்தில் தங்கத்தில் உருவாக்கப்பட்ட கழிப்பறை திறப்பு பொதுமக்கள் பயன்படுத்தலாம்
லட்சங்களிலும், கோடிகளிலும் புரள்கிற பெரும்பணக்காரர்கள் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட தட்டுகளில் சாப்பிடுவது உண்டு. அதை அவர்கள் பெருமையாக கருதுவதும் உண்டு.
ஆனால் பணக்காரர்கள் மட்டுமின்றி, சாமானிய மனிதர்களும்கூட நுழைவுக்கட்டணம் செலுத்தி சென்றால், பயன்படுத்த உகந்த தங்கத்தாலான கழிப்பறை ஒன்று, அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கழிப்பறை, அங்குள்ள குகென்ஹெயிம் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையின் தங்க இருக்கையை 18 கேரட் தங்கத்தைக் கொண்டு, இத்தாலி நாட்டின் மிலான் நகரை சேர்ந்த கலைஞர் மவுரிசியோ கேட்டலான் (வயது 55) வடிவமைத்து உள்ளார்.
இந்த கழிப்பறைக்கு ‘அமெரிக்கா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பொருளாதார சமத்துவமின்மையால் உந்தப்பட்டு, இந்த படைப்பை உருவாக்கி உள்ளதாக கேட்டலான் கூறி உள்ளார். இந்த தங்க கழிப்பறை இருக்கை, துணிச்சலான படைப்பு என்று அருங்காட்சியகம் கூறுகிறது.
No comments