Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

களியக்காவிளை அருகே லாரி மோதி பெண் பலி

களியக்காவிளை அருகே உள்ள புதுவல் இளம்சிறையை சேர்ந்தவர் ரெஜிகுமார். இவரது மனைவி சுதா (வயது 47) இவர் தனது மகள் வின்சி (22) -ன் ஸ்கூட்டரில் பின்...

களியக்காவிளை அருகே உள்ள புதுவல் இளம்சிறையை சேர்ந்தவர் ரெஜிகுமார். இவரது மனைவி சுதா (வயது 47) இவர் தனது மகள் வின்சி (22) -ன் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து மேல்பாலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கொட்டரகோணம் பகுதியில் சென்றபோது எதிரே ஒரு லாரி வேகமாக வந்தது. இதைபார்த்த வின்சி ஸ்கூட்டரை சாலையில் இருந்து கீழே இறங்கி நின்றார். ஆனால், வேகமாக வந்த லாரி ஸ்கூட்டரில் இருந்த சுதாவின் மீது மோதியது. இதில் சுதா சாலையில் விழுந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின் சக்கரம் சுதாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுதாவின் மகள் வின்சி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதற்கிடையே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பளுகல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்