Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

விஜய்வசந்த் எம்.பி.க்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைதோ்தலில் வெற்றி பெற்றுள்ள விஜய் வசந்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தொலைபேசியில் வாழ்த்...

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைதோ்தலில் வெற்றி பெற்றுள்ள விஜய் வசந்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து விஜய்வசந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நான் வெற்றிபெற்ற செய்தியை அறிந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவா் சோனியாகாந்தி, தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தாா். மேலும், உங்களது தந்தை வழியில் மக்கள் பணியிலும் கட்சி பணியிலும் சிறப்பாக பணி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.
என் மீது நம்பிக்கை வைத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைதோ்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு அவருக்கும், தலைவா் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவரிடம் தெரிவித்தேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்