Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

3 மாத கர்ப்பிணி மகள் சுட்டுக்கொலை… தந்தை கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கரடிக்கல் கிராமத்தில் அருணாச்சலம் (50) - மாதவி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது மகள் வெங...

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கரடிக்கல் கிராமத்தில் அருணாச்சலம் (50) - மாதவி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது மகள் வெங்கடலட்சுமி(21). இந்த நிலையில் வெங்கடலட்சுமிக்கு அண்மையில் திருமணம் முடிந்துள்ளது. அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் யுகாதி பண்டிகையையொட்டி வெங்கடலட்சுமி (21) தனது கணவர் ஸ்ரீனிவாஸ் உடன் தாயார் வீட்டிற்கு விருந்துக்கு வந்துள்ளனர். மகளுக்கு விருந்து பக்கம் இருந்தாலும் அருணாச்சலம் மது அருந்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது அருணாச்சலம் தனது மனைவி மாதவியுடன் குடிபோதையில் சண்டை போட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட முயன்றுள்ளார். ஆனால், அப்போது குறுக்கே வந்த மகள் வெங்கடலட்சுமியை அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் வெங்கடலட்சுமியின் வலது மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த வெங்கடலட்சுமி பார்த்து கதறி அழுத அருணாச்சலம், அய்யோ ஆத்திரத்தில் மகளை சுட்டுக்கொன்று விட்டேனே என்று கதறியவாறு மகளை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு வெங்கடலட்சுமியை பரிசோதித்த மருத்துவர், வெங்கடலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். 3 மாத கர்ப்பிணியாக உள்ள பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் மகளை கொலை செய்த தந்தை அருணாச்சலத்தை தளி போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து இது தொடர்பான புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்