மணவாளக்குறிச்சி தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் சுயம்பு. இவர் நேற்று முன்தினம் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையம் வந்து, தனது மகன் சுரேஷ் மது அரு...
மணவாளக்குறிச்சி தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் சுயம்பு. இவர் நேற்று முன்தினம் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையம் வந்து, தனது மகன் சுரேஷ் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்து தாக்கியதாக புகார் செய்தார்.

இதையடுத்து பணியில் இருந்த ஏட்டு ஜஸ்டின் ராஜ், சுரேஷ் வீட்டுக்கு சென்று அவரை காவல்நிலையத்திற்கு வரும்படி அழைத்தார்.
அப்போது சுரேஷ் தகாத வார்த்தைகளால் பேசி ஏட்டு ஜஸ்டின் ராஜை அரசு பனி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஜஸ்டின் ராஜ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் சுரேஷ் மீது வழக்குபதிவு செய்தனர்.
இதையறிந்த சுரேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
















No comments