Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கணபதிபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பத்திரப் பதிவாளர் கைது

கணபதிபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பத்திரப் பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ராஜாக...

கணபதிபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பத்திரப் பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ராஜாக்கமங்கலம் அருகே ஆத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணஜோதி (வயது 45), விவசாயி. இவர் ஆத்திக்காட்டுவிளை பகுதியில் நிலம் வாங்கினார். அந்த நிலத்தை தனது பெயரில் பதிவு செய்ய கணபதிபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு, பத்திரப்பதிவாளராக பணியாற்றி வரும் கேசவன்புதூர் பகுதியை சேர்ந்த பனிமய ஜெயசிங்டன் (வயது 50) என்பவர் பத்திரப்பதிவு செய்வதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. இதனால், கிருஷ்ண ஜோதி அதிர்ச்சி அடைந்தார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதனைதொடர்ந்து சார்-பதிவாளரை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் மற்றும் போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ரசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ண ஜோதியிடம் கொடுத்து அதை சார்-பதிவாளரிடம் கொடுக்கும்படி கூறினர்.
இதனைதொடர்ந்து நேற்று மாலை கிரு‌‌ஷ்ணஜோதி கணபதிபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று பத்திரப்பதிவாளர் பனிமய ஜெயசிங்டனிடம், ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.

பணத்தை அவர் பெற்று கொண்டதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரப்பதிவாளரை கையும், களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய போது பத்திரப்பதிவாளர் போலீசாரிடம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்