குளச்சல் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் இளம்பெண்ண...
குளச்சல் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் இளம்பெண்ணின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை கவனித்து கொள்ள இளம்பெண், தாயார் வீட்டுக்கு சென்றார். அங்கு கடந்த 15 நாட்களாக தங்கி தாயை கவனித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென்று 5 பவுன் தாலி, ½ பவுன் கம்மலை தாய் வீட்டில் கழற்றி வைத்து விட்டு இளம்பெண் மாயமாகி விட்டார்.
அவரை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபற்றி குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தாலியை கழற்றி வைத்து விட்டு மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments