குளச்சல் நாராயணநகரை சேர்ந்தவர் நாகராஜன் (40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆஷா(33). கடந்த 31-ம் தேதி ஆஷா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்டோவ...
குளச்சல் நாராயணநகரை சேர்ந்தவர் நாகராஜன் (40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆஷா(33). கடந்த 31-ம் தேதி ஆஷா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்டோவில் மண்டைக்காடு கோயிலுக்கு சென்றனர். பின்னர் கடலில் கால் நனைப்பதற்கு சென்றனர். ஆட்டோவை கடல் சப்பாத்து அருகில் நிறுத்தினர்.

அப்போது புதூரை சேர்ந்த அருண் அங்கு காரில் வந்தார். பாதையில் ஏன்? ஆட்டோவை நிறுத்தி உள்ளீர்கள் என கேட்டார். இது தொடர்பாக ஆஷா - அருண் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அருண் ஆஷா மற்றும் அவரது அண்ணன் ரவிகுமாரையும் தாக்கி மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த ஆஷா மற்றும் ரவிகுமார் ஆகியோர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இது குறித்து மண்டைக்காடு போலீசார் அருண் மீது பெண் வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அருணை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மண்டைக்காடு கோயில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்ட செயலாளர் மிசா சோமன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன், கோட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசன், கோட்ட அமைப்பாளர் முத்துக்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜராம், தேசிய பா.ஜ. பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட பா.ஜ.தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், மாவட்ட பஞ்.துணைத்தலைவர் சிவகுமார், இந்து கோயில்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் வேல்தாஸ், பொதுச்செயலாளர் ஸ்ரீபதிராஜ் மற்றும் அனைத்து இந்து இயக்கங்களின் நிர்வாகிகள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
குளச்சல் ஏ.எஸ்.பி.விஸ்வேஸ் பி.சாஸ்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
No comments