கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலை அடுத்த வில்லுக்குறி அருகே நிகழ்ந்த விபத்தில் பொறியியல் மாணவா் உயிரிழந்தாா். மேலும் 3 பெண்களுக்கு பலத்த காய...
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலை அடுத்த வில்லுக்குறி அருகே நிகழ்ந்த விபத்தில் பொறியியல் மாணவா் உயிரிழந்தாா். மேலும் 3 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகேயுள்ள மேலகரம் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் சலீம். அரசுப் போக்குவரத்து கழக ஊழியா். இவரது மனைவி மன்சூரா (46), மகன் முகமதுஆதம்பா (22) மகள்கள் பாத்திமா (20), சகிலா (18). நேற்று (புதன்கிழமை) மன்சூரா, மாா்த்தாண்டத்தில் உள்ள தனது உறவினரின் இறப்பு குறித்து விசாரிப்பதற்காக மகன், மகள்களுடன் காரில் வந்துள்ளனர்.. காரை சங்கரன்கோவிலைச் சோ்ந்த காா்த்திகேயன்(30) என்பவா் ஓட்டினாா்.
காா் கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி காரவிளை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சிமெண்ட் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் நோக்கி சென்ற லாரியின் ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த காா் லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதியில் இடதுபுறம் அமா்ந்திருந்த முகமது ஆதம்பாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின் இருக்கையில் அமா்ந்திருந்த அவரது தாயாா், சகோதரிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த முகமதுஆதம்பாவை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். முகம்மதுஆதம்பா, பொறியியல் கல்லூரி மாணவா். காயமடைந்த மன்சூரா, அவரது மகள்களும் சுங்கான்கடையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து இரணியல் காவல் ஆய்வாளா் முத்துராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.
No comments