மண்டைக்காடு கோயிலில் திருவிழா பந்தல்கால் நாட்டுவிழா நடந்தது. பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிப் பெருந்...
மண்டைக்காடு கோயிலில் திருவிழா பந்தல்கால் நாட்டுவிழா நடந்தது. பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா பிப்ரவரி 28-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை பத்து நாட்கள் நடக்கிறது.

இதற்கான பந்தல்கால் நாட்டுவிழா தைப்பூச நாளில் நடந்தது. இதை முன்னிட்டு காலை உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், உஷபூஜை, நிறை புத்தரிசி பூஜை, பந்தல்கால் நாட்டுவிழா நடந்தது.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோயில் இணை ஆணையர் அன்பு மணி, அறங்காவல் குழு தலைவர் சிவகுற்றாலம், கோயில் தந்திரி மகாதேவரு ஐயர், பத்மனாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில் குமார், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், மராமத்து பொறியாளர் ஐயப்பன் மற்றும் ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகள், தேவி சேவா சங்க நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments