Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாகர்கோவிலில் பரபரப்பு: திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் திடீர் ஓட்டம்

நாகர்கோவில் அருகே உள்ள கரியமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், புத்தன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் நிச்...

நாகர்கோவில் அருகே உள்ள கரியமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், புத்தன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
வாலிபர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். பெண் பிஇ படித்துள்ளார். 

திருமணத்தின் போது பணம், நகை மற்றும் சீர்வரிசை செய்வதாக பெண் வீட்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிச்சயதார்த்தம் நடந்தபோது 5 பவுன் நகையும், ரூ. 2 லட்சம் ரொக்கமும் மணமகன் வீட்டிற்கு பெண் வீட்டார் கொடுத்தனர். 
திருமணம் நேற்று (26-ம் தேதி) நடத்துவது என பெரியோர்களால் முடிவு செய்திருந்தனர். இருவீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட இருவரும் போனில் தங்களது வருங்கால வாழ்க்கையை பற்றி பேசி வந்தனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மணமகன் வீட்டில் இருந்து திடீரென மாயமார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் மணமகனை தேடியும், அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த தகவல் பெண் வீட்டாற்கு தெரிந்தது. 
அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார்கள் என்ன செய்வது என தெரியாமல் கலக்கம் அடைந்தனர். தொடர்ந்து மணமகன், மணமகள் தரப்பில் கோட்டார் போலீஸ் நிலையம் வந்து, நடந்த விபரங்களை கூறினர். 

மணமகனுக்கு வேறு எந்த பெண்ணுடன் காதல் உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மணமகன் வீட்டிற்கு சென்று, ஏதாவது கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றாரா? என்ற அடிப்படையில் வீட்டில் தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 
இதனையடுத்து மணமகனின் தம்பிக்கு, அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மணமகனின் பெற்றோர் விரும்பினர். ஆனால் மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இருதரப்பிடமும் போலீசார் பேசினர். திருமணத்தை நிறுத்துவது என இருதரப்பினரும் தெரிவித்தனர். 

மணமகன் வீட்டார், நிச்சயதார்த்தம் அன்று பெண் வீட்டார் கொடுத்த 5 [பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கத்தை திருப்பி கொடுத்தனர். அதுபோல் பெண்வீட்டார், மணமகன் வீட்டில் போட்ட நகையை திரும்ப கொடுத்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து திரும்பி சென்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்