குமரி மாவட்டத்தில் மன்னர் ஆட்சி காலத்தில் கட்டபட்ட அரண்மனைகள், பெரிய கோவில்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் சில அரண்மனைகள், கோயில்கள் சிதிலம் அ...
குமரி மாவட்டத்தில் மன்னர் ஆட்சி காலத்தில் கட்டபட்ட அரண்மனைகள், பெரிய கோவில்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் சில அரண்மனைகள், கோயில்கள் சிதிலம் அடைந்து காணப்படுகிறது.

இதில் இரணியல் அரண்மனையும் ஒன்று. இந்த அரண்மனை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அரண்மனை சிதிலம் அடைந்து காணப்படுவதால், பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வந்தன.
இந்நிலையில் இரணியல் அரண்மனையை 3 கோடியே 85 லட்சம் செலவில் புனரமைப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் நேற்று அரண்மனையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பொதுப்பணித்துறை (கட்டுமானம்) தலைமை பொறியாளர் ரெகுநாதன் தலைமையில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயற்பொறியாளர் வெண்ணிலா, உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், பொதுப்பணித்துறை (கட்டுமானம்) செயற்பொறியாளர் ஜெயராம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
No comments