மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடற்கரை கிராமம் முட்டம். முட்டம் ஊராட்சியில் கடந்த 1996 ஆண்டு முதல் 2002 வரை தலைவராக இருந்தவர் சசியோன் (வயது 55)....
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடற்கரை கிராமம் முட்டம். முட்டம் ஊராட்சியில் கடந்த 1996 ஆண்டு முதல் 2002 வரை தலைவராக இருந்தவர் சசியோன் (வயது 55).

அப்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக முட்டம் ஊராட்சி முன்னாள் தலைவர் சசியோனுக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
சசியோன் தலைவராக இருந்தபோது, தொழில் வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவற்றில் ரூ. 61 ஆயிரம் கையாடல் செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
ஜெ.எம்.1-வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கிறிஸ்டியன் நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில், சசியோன் மீது இருபிரிவுகளில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
No comments