Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மாமியாரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை செய்த மருமகள்!

ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் தீபக் - நிகிதா தம்பதியினர். தீபக்குடன் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் இவர்களுடன் வசித்து வந்தனர். இந்...

ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் தீபக் - நிகிதா தம்பதியினர். தீபக்குடன் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் இவர்களுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், மாமியார் - மருமகள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில், நேற்று முன்தினம் நிகிதாவின் கணவர் தீபக் வேலைக்கு சென்றுள்ளார். மாமனார் ராம் நிவாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், நிகிதா மற்றும் ரேகா இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில், மாமியார் ரேகா, 4 மாத கர்ப்பமாக உள்ள நிகிதாவை பார்த்து, வயிற்றில் வளரும் குழந்தைக்கு தனது கணவர் தான் காரணம் என்றும், மாமனாருடன் தவறான தொடர்பை நிகிதா வைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த நிகிதா மாமியார் ரேகாவை இரும்பு கம்பியால், சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் ரேகாவின் உடலில் தீ வைத்துள்ளார். இருவரின் சத்தம் கேட்ட அக்கம் பாக்கத்தினர் நிகிதாவின் கணவர் தீபக்கிற்கு போன் செய்துள்ளனர். 
இதனையடுத்து, உடனடியாக வீட்டிற்கு வந்த தீபக், வீட்டிற்குள்ளே சென்று பார்த்த போது, ரேகா இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 
மேலும், நிகிதா தான் கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், போலீசார் நிகிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்