Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாகர்கோவில் அருகே மைனர் பெண்ணிடம் அத்துமீறல்: தாயின் 2-வது கணவர் கைது

நாகர்கோவில் அருகே மைனர் பெண்ணிடம் அத்துமீறிய தாயின் இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் துவரங்காடு பகுதியை சேர்ந்த ஒரு விதவை பெ...

நாகர்கோவில் அருகே மைனர் பெண்ணிடம் அத்துமீறிய தாயின் இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் துவரங்காடு பகுதியை சேர்ந்த ஒரு விதவை பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர். மொத்தமகள் காதல் திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில், அதே பகுதியில் திருமணம் ஆகி, தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை பிரிந்து இருந்த மணிகண்டன் (வயது 34) என்பவர், விதவை பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். 
இந்நிலையில் மணிகண்டம் அப்பெண்ணின் இரண்டாவது மகளான 17 வயது நிரம்பிய பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால், அந்த 2-வது மகள் கடந்த ஆகஸ்ட் மாதம் பக்கத்துவீட்டு சஜின் (வயது 27) என்பவருடன் வீட்டை விட்டு வெளியேறி, மேக்காமண்டபம் பகுதியில் வசித்து வந்தார். 
இதுகுறித்து தாயார் அளித்த புகாரின் பேரில், நாகர்கோவில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி கடந்த 30-ம் தேதி 2-வது மகளை மீட்டு, சஜினை கைது செய்தார். இந்நிலையில் மாஜிஸ்டிரேட் முன்பு வாக்குமூலம் அளித்த அந்த பெண், தன்னை அம்மாவின் 2-வது கணவர் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். 
இதனால் தான் வீட்டைவிட்டு வெளியேறியதாக கதறி அழுது கூறினார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி சாந்தகுமாரி தாயாரின் இரண்டாவது கணவரை கைது செய்தார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்