Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் தெப்பகுளத்தில் விழுந்து முதியவர் பலி

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் தெப்பகுளத்தில் குளித்து கொண்டிருந்த முதியவர் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் நந...

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் தெப்பகுளத்தில் குளித்து கொண்டிருந்த முதியவர் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார்.
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன் (75). இவர் சம்பவத்தன்று வழக்கமாக குளிக்க செல்லும் தெப்பக்குளத்தில் குளிக்க சென்றுள்ளார். 
குளத்தில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குளத்தில் விழுந்துள்ளார். இதை பார்த்த சிறுவர்கள் உடனே முதியவரை மீட்க முயற்சி செய்துள்ளனர்.
 
ஆனால் முதியவரை மீட்க முடியவில்லை. இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 
நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று குளத்தில் இருந்து முதியவரை உயிரிழந்த நிலையில் வெளியே எடுத்து வடசேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்