மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக உறுப்பினர்களுக்கு பங்காதாய ஈவுத்தொகை வழங்காததை கண்டித்தும...
மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக உறுப்பினர்களுக்கு பங்காதாய ஈவுத்தொகை வழங்காததை கண்டித்தும், ஒருங்கிணைந்த கூட்டுறவு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பெற்ற பணத்தை கையாடல் செய்ததை கண்டித்தும்,
விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசின் செயல் திட்டங்களை செயல்படுத்தாத நிர்வாகத்தை கண்டித்தும் உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி மணவாளக்குறிச்சி ஜங்சனில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு குருந்தன்கோடு ஒன்றிய துணைத் தலைவர் ஐயப்பன் மற்றும் லிங்கேஸ்வரன் தலைமை தாங்கினர். குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ், மணவாளக்குறிச்சி மண்டல் தலைவர் சுரேந்திரன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஐயப்பன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினமணி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட எஸ்.சி. அணித் தலைவர் கதிரேசன், மாநில நகர்புற வளர்ச்சி பிரிவு செயலாளர் சிவகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். வெங்கடாச்சலம் நன்றி கூறினார்.
No comments