கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், அமெரிக்கா, இத்தாலி நாட்டிலிருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த தம்பதி உள்ளிட்ட 5 பேருக்கு ரத்த பரிசோதனை...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், அமெரிக்கா, இத்தாலி நாட்டிலிருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த தம்பதி உள்ளிட்ட 5 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் ஏற்கெனவே 3 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். தற்போது யாரும் அங்கு சிகிச்சை பெறவில்லை.
கொரோனா வைரஸ் பாதித்த சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குமரி மாவட்டம் வருவோா் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் இருந்து அண்மையில் 5 போ் குமரி மாவட்டம் வந்தனா். அமெரிக்காவில் இருந்து கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகளும், இத்தாலியில் இருந்து ஒருவரும் குமரி மாவட்டம் வந்திருந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட சுகாதாரப் பணியாளா்கள் மூலம் 5 பேரின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும்வரை அவா்கள் 5 பேரும் அவா்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குநா் போஸ்கோராஜா கூறியது:- குமரி மாவட்டத்தின் அருகிலுள்ள மாநிலமான கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் பலா் பணியாற்றி வருகின்றனா். இதைத் தொடா்ந்து, குமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு சென்று வரும் தொழிலாளா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா், என்று கூறினார்.
No comments