மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வரும்வேளையில், தவறவிட்ட குழந்தையை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மண்டைக்காட...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வரும்வேளையில், தவறவிட்ட குழந்தையை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கடந்த மார்ச் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாமி தரிசனத்திற்கு வந்த ஒருவரின் 4 வயது குழந்தை கோவிலில் வைத்து காணாமல் போய் விட்டது.
குழந்தையின் பெற்றோர் பல பகுதிகளில் தேடியும் குழந்தை குறித்த எந்த தகவலும் இல்லை. இதனை தொடர்ந்து பெற்றோர் மண்டைக்காடு கோவிலில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் அவுட்போஸ்டில் புகார் தெரிவித்தனர்.
இத்தகவல் குளச்சல் ஏஎஸ்பி விஷ்வேஸ் சாஸ்திரி கவனத்திற்கு சென்றது. அவர் உடனடியாக குழந்தையை மீட்க கோவில் பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவலர்களும் துரிதமாக தேடுதலில் ஈடுபட உத்தரவிட்டார். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மண்டைக்காடு கடற்கரை பகுதியில் ஒரு குழந்தை தனியாக நடந்து வந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த நாகர்கோவில் ஆயுதப்படை காவலர் பெரின் ஸ்மித் மற்றும் அருமனை காவலர் வின்சென்ட் ஆகியோர் குழந்தையை மீட்டு மண்டைக்காடு போலீஸ் அவுட்போஸ்ட்க்கு கொண்டு வந்தனர்.
அங்கு வைத்து குழந்தையை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை எவ்வாறு கடற்கரைக்கு சென்றது என்பது மர்மமாக உள்ளது. குழந்தையை கடத்த யாராவது முயற்சி செய்தார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
















No comments