மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் எம்.எஸ்.சலீம். இவரது மகள் எஸ்.எஸ். ஸனா. இவர் நாகர்கோவில் அருகே உள்ள மெட்ஸ் நர்சரி ஆண்ட் ப்ரை...
மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் எம்.எஸ்.சலீம். இவரது மகள் எஸ்.எஸ். ஸனா. இவர் நாகர்கோவில் அருகே உள்ள மெட்ஸ் நர்சரி ஆண்ட் ப்ரைமரி ஸ்கூலில் யூகேஜி பயின்று வருகிறார்.

மாணவி ஸனா எல்கேஜி படிக்கும் போது ஸ்கூலில் நடத்தப்படும் பல போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றுள்ளார். பேச்சுப்போட்டி, ரைம்ஸ் கூறுதல், மியூசிக்கல் செயர் எனப் பல போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளியுள்ளார்.
கடந்த ஆண்டு நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் வைத்து நடந்த குமரி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் 26 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மியூசிக்கல் செயர் போட்டியில் 2-ம் பரிசை பெற்றார். அதற்கான கேடயமும், சான்றிதழையும் பெற்றார். முதல் பரிசை நூலிழையில் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் குமரி மாவட்ட அளவில் நாகர்கோவிலில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த, 50 க்கும் மேற்பட்ட ஸ்கூல் மாணவ, மாணவியர் கலந்து கொண்ட மாபெரும் தனித்திறன் போட்டியில் அழகிய முறையில் ரைம்ஸ் கூறி, முதல் இடத்தை பிடித்தார்.
முதல் இடத்தை பிடித்த மாணவி ஸனாவிற்கு வகுப்பு ஆசிரியை நஸ்ரின், பிரின்ஸ்பால் சரண்யா, தாளாளர் அமீர் ஹுசைன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

தற்போது மாணவி ஸனா, அடுத்த வாரம் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறும் குமரி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். அந்த போட்டியிலும் பங்கேற்று முதல் பரிசை பெறுவேன் என்று கூறுகிறார்.
வளர்ந்து வரும் இளம் சாதனையாளர் ஸனா-வை, மென்மேலும் பல பரிசுகள் பெற்று வெற்றி வாகைசூட குமரி இன்ஃபோ இணையதளம் வாழ்த்துகிறது.
















Congratulations...
ReplyDeleteவாழ்த்துக்கள்! உனது எதிர்காலம் சிறப்பானதாக அமையட்டும்.!!
ReplyDelete