கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. பக்தர்கள்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 16 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலில் மாசிக்கொடை விழா வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதற்கு முன்னதாக உண்டியல்கள் அனைத்தும் நேற்று திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ரத்னவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
இந்த பணியில் முதுநிலை கணக்கு அலுவலர் இங்கர்சால், குழித்துறை தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் கோபாலன், பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுகம், பெண்கள் சுயஉதவி குழுக்கள், பக்தர்கள் ஈடுபட்டனர்.
எண்ணிக்கை முடிவில் ரொக்கம் ரூ. 8,92,851, தங்கம் 52.8 கிராம், வெள்ளி 271 கிராம், அமெரிக்க டாலர் 5, சவுதி ரியால் 5, யூஏஇ திர்காம் 2, மலேசியன் ரிங்கிட் 1 ஆகியவை வசூலாயிருந்தது.
















No comments