ஜார்கண்ட் மாநிலத்தில் தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் குழந்தைகளுடன் திருமணம் நடந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஜார்கண்ட் மாநிலத்தி...
ஜார்கண்ட் மாநிலத்தில் தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் குழந்தைகளுடன் திருமணம் நடந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் திருமணமாகாமல் ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அதன்படி இந்த கிராமத்தை சேர்ந்த ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதியினர் 30 வருடங்களுக்கும் மேலாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகன் இருக்கின்றார்.
அவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், மகன் ஜித்தீஷும் திருமணம் செய்யாமலே அருணா என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கின்றது.
இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் திருமணம் செய்யாமல் இருப்பதால் தொண்டு நிறுவனமொன்று தங்களுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தது.
அதன்படி அந்த தந்தை மற்றும் மகன் இருவருக்கும் ஒரே மேடையில், ஒரே நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. குழந்தையுடன் தாத்தாவுக்கும், தந்தைக்கும் திருமணம் நடைபெற்ற இந்த சம்பவம் பிற பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
















No comments