தமிழக முன்னாள் முதல்வர் அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) மாநாடு மற்றும் நலத...
தமிழக முன்னாள் முதல்வர் அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கிறார் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சித்தார்சத்திரம் பகுதியில் மாபெரும் மாநாடு பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் அம்மா முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர், நாளைய தமிழகம், மக்கள் செல்வர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார்.
அமமுகவின் தமிழ்நாடு தென்மண்டல பொறுப்பாளர் கடம்பூர் இளைய ஜமீன்தார் மாணிக்கராஜா, குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன், துணை செயலாளர்கள் மணவாளக்குறிச்சி சுல்பிக்கர் அலி, சிசிலி, இணைச் செயலாளர் அம்மு ஆன்றோ உள்பட கட்சி நிர்வாக உறுப்பினர்கள் பெரும்திரளாக கலந்து கொள்கின்றனர்.
இரும்பு பெண்மணி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா மற்றும் மாநாட்டிற்கு அலைகடலென மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டி குமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மணவாளக்குறிச்சி சுல்பிக்கர் அலி அன்போடு அழைக்கிறார்.
















No comments