வேலை வழங்க வேண்டும் என்று கேட்டு மனுவுடன் கலெக்டர் அலுவலகம் வந்த இளம்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சிப்பாறை அருகே கா...
வேலை வழங்க வேண்டும் என்று கேட்டு மனுவுடன் கலெக்டர் அலுவலகம் வந்த இளம்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சிப்பாறை அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் நேவல்ராஜ். இவரது மனைவி சுமா. இவர் நேற்று காலை நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்திருந்தார்.
கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்த சுமா, நீண்ட வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.
சுமா கலெக்டரிடம் அளிக்க கொண்டு வந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது, எனது கணவர் நோய்வாய்பட்டு இறந்தார். நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். 2 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை வளர்க்க, படிக்க வைக்க எந்த வசதியும் எங்களுக்கு இல்லை. எந்த ஆதரவும் இல்லை. எனவே எனக்கு சத்துணவு திட்டத்தில் வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
No comments