பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளையும், நீதி மறுப்பின் நிலைமையும் மக்களிடம் கொண்டு...
பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளையும், நீதி மறுப்பின் நிலைமையும் மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக “பாபர் மஸ்ஜித் தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என எஸ்.டி.பி.ஐ முடிவு செய்திருந்தது.


அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என ஏஎஸ்பி ஜவஹர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் இரவு 7.30 மணி அளவில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

No comments