குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நெடைபெற்றது. அதன்படி கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் அமைந்து...
குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நெடைபெற்றது.
அதன்படி கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் அமைந்துள்ள வேல்முருகன் கோயிலில் சனிக்கிழமை சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக். 28 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, தினமும் மஹா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம், சிறப்பு வழிபாடு, பஜனை உள்ளிட்டவை நடைபெற்றன.
சனிக்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமம், விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், சிறப்பு வழிபாடு, யாகசாலை பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
சூரன் பவனி: பிற்பகல் 2 மணிக்கு தேரிவிளை குண்டல் முருகன் கோயிலில் இருந்து சூரன் பவனி தொடங்கியது. இந்த பவனி விவேகானந்தபுரம், பரமாா்த்தலிங்கபுரம், பழத்தோட்டம் வழியாக மாலை 6 மணிக்கு முருகன் குன்றம் வந்தடைந்தது.
அங்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, இரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
No comments