தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) போதகா்களுக்கான மூன்று நாள் மாநாடு கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை (நேற்று) தொடங்கியது. தமிழ்நாடு, ஆ...
தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) போதகா்களுக்கான மூன்று நாள் மாநாடு கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை (நேற்று) தொடங்கியது.
தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென்னிந்திய திருச்சபை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போதகா்கள் மாநாட்டை நடத்தி வருகிறது. நிகழாண்டு மாநாடு கன்னியாகுமரி பெரியாா்நகா் சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலய வளாகத்தில் தொடங்கியது.
மாநாட்டை தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயா் தாமஸ் கே.உமன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயா் செல்லையா வரவேற்றாா்.
மாநாட்டின் இரண்டாவது நாளான புதன்கிழமை (நவ.6) கன்னியாகுமரி தூயபேதுரு ஆலயத்தில் இருந்து காந்திமண்டபம் வரை சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி நடைபெறும்.
வியாழக்கிழமை (நவம்பர் 7) வரை நடைபெறும் இம்மாநாட்டில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட போதகா்கள் கலந்து கொள்கின்றனா்.
No comments