குமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த முன்னா...
குமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டார்.
அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ.வும் அமமுகவின் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளராகவும் இருந்த நாஞ்சில் முருகேசனும் அதிமுகவில் இணைந்தார்.
மேலும் நாகர்கோவில் மாநகர அம்முக செயலாளர் அட்சயா கண்ணன், தோவாளை ஒன்றிய அம்முக செயலாளர் கே.சி.யு. மணி உள்ளிட்ட பலரும் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அதிமுக மாவட்ட செயலாளர்கள் அசோகன், ஜாண் தங்கம், முன்னாள் வக்புவாரிய தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments