தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (06-11-2019) அதிகாலை 2 மணி அளவில் பூத்துறையை சேர்ந்த ஷிபு என்பவருக்கு சொந்தமான நிர...
தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (06-11-2019) அதிகாலை 2 மணி அளவில் பூத்துறையை சேர்ந்த ஷிபு என்பவருக்கு சொந்தமான நிர்மல் மாதா என்ற விசைப்படகில் குமரி மாவட்டம் மற்றும் வடஇந்தியாவை சேர்ந்த 10 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் சென்ற விசைப்படகு நேற்று மாலையில் திடீரென பழுதடைந்தது. மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். இது தொடர்பாக கடலோர காவல்படை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் மட்டுமே நாங்கள் சென்று மீட்க முடியும், படகுக்கு ஆபத்து என்றால் மீனவர்கள் தாமே கரை சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் முட்டம் ஆழ்கடல் பகுதியில் 8 நாட்டிக்கல் தொலைவில் தத்தளிக்கும் நிர்மல்மாதா விசைப்படகையும், அதிலுள்ள 10 மீனவர்களையும் மீட்பதற்காக, விசைப்படகில் இருந்த மீனவர் ஒருவர் வேறு படகில் இன்று காலையில் கரைக்கு வந்தார்.
அவர் பிற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஏற்கனவே வந்த கியா புயலால் பாதிக்கப்பட்டு லட்சத்தீவில் கரை ஒதுங்கி நேற்று தேங்காய்ப்பட்டணம் துறைமுகம் வந்துசேர்ந்த பூத்துறை சேர்ந்த ஷிபு என்பவருக்கு சொந்தமான ஜீசஸ் ரிடிமர் என்ற விசைப்படகு தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டு சென்றது.
இந்த படகு மூலம் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கவும், அவர்களது விசைப்படகை கட்டி இழுத்து துறைமுகத்திற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறபபடுகிறது.
No comments