சமீப காலமாக நேரில் பார்க்காமலேயே பேஸ்புக் மூலம் பழகும் நண்பர்களுடன் இளம் பெண்கள், மாணவிகள் ஓட்டம் பிடிப்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. ...
சமீப காலமாக நேரில் பார்க்காமலேயே பேஸ்புக் மூலம் பழகும் நண்பர்களுடன் இளம் பெண்கள், மாணவிகள் ஓட்டம் பிடிப்பது தொடர்கதையாக நடந்து வருகிறது.
திருமணமான பெண்கள் கூட கணவன், குழந்தைகளை விட்டுவிட்டு பேஸ்புக் நண்பர்களுடன் ஓட்டம் பிடிக்கும் சம்பவம் சர்வ சாதாரணமாகி விட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் திருச்சூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஓரே நாளில் அடுத்தடுத்து 6 பெண்கள் திடீரென மாயமானார்கள்.
இவர்களில் பள்ளி, கல்லூரி மாணவிகளும் உள்ளனர். இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விரைந்து விசாரணை நடத்த திருச்சூர் சரக டிஐஜி சுரேந்திரன் உத்தரவிட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் அனைவரும் பேஸ்புக் மூலம் பழக்கமானவர்களுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கொல்லம், காசர்கோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்த 6 பேரையும் அதிரடியாக மீட்டனர். இவர்கள் அனைவரும் ஒருமுறை கூட நேரில் பார்க்காத பேஸ்புக் காதலனுடன் ஓடியது தெரிய வந்தது.
பின்னர் 6 பேரின் பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
No comments