தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் அரசு மருத்து...
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவின் பேரில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மருத்துவக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள், சமூக மருந்தியல்துறை சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்தது.
பேரணிக்கு டீன் பாலாஜி நாதன் தலைமை வகித்தார். பேரணியில் கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஆருமுகவேலன், உதவி உறைவிட மருத்துவர்கள் விஜயலெட்சுமி, ரெனிமொள், பொதுமருத்துவர் காவேரி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் டாக்டர்கள் செல்வகுமார் கிங்சிலி, லெனின் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணி தொடர்ந்து கல்லூரி பசுமை இயக்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை டீன் பாலாஜி நாதன் நட்டார்.
No comments