மணவாளக்குறிச்சி அருகே உள்ள மணவிளை சானல் கரையில் அனாதையாக ஒரு பைக் நின்றது. யாருடைய பைக் என்று தெரியவில்லை. வெள்ளிச்சந்தை சப் இன்ஸ்பெக்...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள மணவிளை சானல் கரையில் அனாதையாக ஒரு பைக் நின்றது. யாருடைய பைக் என்று தெரியவில்லை.
வெள்ளிச்சந்தை சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் நேற்று மணவிளை சானல்கரை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் பைக் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த பைக்கில் இன்ஜின், சேஸ் நம்பர்கள் அழிக்கப்பட்ட நிலையில் நின்றது. அந்த பைக் யாருடையது எனத்தெரியவில்லை.
சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், அந்த பைக்கை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
கைப்பற்றப்பட்ட பைக் யாருடையது.? திருட்டு அல்லது சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா.? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments