மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டம் பகுதியில் நடந்த கோஷ்டி மோதலில் 15 பேர் வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. மணவாளக்குறிச்சிய...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டம் பகுதியில் நடந்த கோஷ்டி மோதலில் 15 பேர் வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
மணவாளக்குறிச்சியை அடுத்த முட்டம் அலங்கார மாதா தெருவை சேர்ந்தவர் ஜேசு அடிமை (வயது 49). இவருக்கும் கீழமுட்டம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் மீன்பிடி தொழில் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று ஜேசு அடிமை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தைவீன், கோபி, ஆகாஷ், பூமணி, பெனிட்டா உள்பட 15 பேர் ஜேசு அடிமையை மிரட்டியதாக தெரிகிறது.
இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜேசு அடிமை வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில், வெள்ளிச்சந்தை போலீசார் 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments