மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் “கூட்டுறவு விழா” நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் கூட்டுறவு வாரவிழா நடைபெற்று வர...
மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் “கூட்டுறவு விழா” நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் கூட்டுறவு வாரவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வருடம் கூட்டுறவு வாரவிழா நவம்பர் 14 முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் “இந்திய ரிசர்வ் வங்கியின் மின்னணு மற்றும் நிதியியல் கல்வியறிவு திட்டம்” (Reserve Bank of India Digital & Financial Literacy Camp – FLDC) சார்பில் கூட்டுறவு வாரவிழா இன்று (15-11-2019) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் சதீஷ்குமார், நாகர்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கள மேலாளர் டி.பால்ராஜ் கோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் சதீஷ்குமார் பேசும்போது, வாழ்க்கையில் சிக்கனம் மிகமுக்கியம், வீட்டில் ஆண் மற்றும் பெண் இருவரும் சம்பாதிக்க வேண்டும், பெண்கள் சிறுதொழில் செய்து வருவாய் ஈட்டவேண்டும், தினந்தோறும் சேமிக்கும் சிறுதொகையை கூட்டுறவு வங்கியில் சேமிக்க வேண்டும் எனவும் பேசினார்.
மேலும், வரும்காலம் அனைத்தும் மின்னணு பரிவர்த்தனையாக இருக்கும், முடிந்தவரை பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னெச்சரிக்கையாகவும், வீட்டில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டு, வீட்டை சுத்தமாகவும் வைக்கவேண்டும் எனவும் பேசினார்.

மத்திய கூட்டுறவு கள மேலாளர் டி.பால்ராஜ் கோபால் பேசும் போது, வங்கியின் வளர்ச்சி திட்டங்களையும், வளர்ச்சிக்கு குழுவின் பங்களிப்பு, தனிநபர் கடன், நகைக்கடன் ஆகியவை பற்றி விரிவாக பேசினார்.
கூட்டுறவு சங்கத் தலைவர் ஐயப்பன் நன்றிவுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சுய உதவிக்குழு அங்கத்தினர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் மற்றும் சுற்றுண்டி வழங்கப்பட்டது.

செய்தி மற்றும் போட்டோஸ்
“புதிய புயல்” மணவை முருகன்
“குமரி இன்ஃபோ” செய்திக்குழு முதன்மையாளர்
No comments