Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சி பகுதியில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது

மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட சக்கப்பத்து பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் தினக்கூலி அடிப்படையில் பால் வியாபாரம் செய்து வரு...

மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட சக்கப்பத்து பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் தினக்கூலி அடிப்படையில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
சேகருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். சேகரின் மருமகள் மற்றும் 2 பேரக்குழந்தைகள் என 5 பேர் வீட்டில் அந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.
தற்போது குமரி உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக மணவாளக்குறிச்சி பகுதியில் பலத்த மழை பெய்கிறது. நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் விடிய விடிய சற்று அதிகமாகவே மழை பெய்தது.
இந்நிலையில் நேற்று இரவு சேகர் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென வீட்டின் அறையில் இருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஏற்பட்ட சத்தத்தில் எழுந்த சேகர் குடும்பத்தினர் வீடு இடிந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றனர்.
வீட்டின் சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் பக்கம் விழுந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் நிகழவில்லை. ஆனாலும் தூங்கி கொண்டிருந்தபோது, வீடு இடிந்ததை நினைத்து, ஒருவித அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் அச்ச உணர்வுடன் சேகர் குடும்பத்தினர் உள்ளனர். தகவல் அறிந்த மணவாளக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்