மணவாளக்குறிச்சி பாலம் பகுதியில் நேற்று மாலை 4.45 மணி அளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வந்த மினிலாரி மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்...
மணவாளக்குறிச்சி பாலம் பகுதியில் நேற்று மாலை 4.45 மணி அளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வந்த மினிலாரி மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

நாகர்கோவில் மொத்த கொள்முதல் கடைகளில் இருந்து மணவாளக்குறிச்சி, குளச்சல் பகுதி கடைகளுக்கு தினமும் பொருட்களை கொண்டுவர மினிலாரிகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை வேளையில் நாகர்கோவிலில் இருந்து பிளம்பிங் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி கொண்டு மினிலாரி ஒன்று மணவாளக்குறிச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. ஆற்றின்கரை பகுதியில் வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அதிவேகத்தில் வந்தது.
இதனால் ஓட்டுநர் லாரியை, பெரும் விபத்தை தடுக்க சாலையில் இருந்து ஓரத்திற்கு திருப்பியபோது, அருகில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் மின்கம்பம் முறிந்தது. ஓட்டுநருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த சற்று நேரத்தில் மணவாளக்குறிச்சி காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மணவாளக்குறிச்சி, துணை மின்நிலைய அதிகாரிகளும், பணியாளர்களும் அங்கு வந்து, சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி, மின்தடையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் வேடிக்கையான சம்பவம் என்னவென்றால், மினிலாரி மோதிய மின்கம்பம், நேற்று மதியம் மாற்றிய புதிய மின்கம்பம். நேற்று முன்தினம் இரவு கேரளாவில் இருந்து ச்ற்றுலா வந்த பேருந்து மோதி பழைய மின்கம்பம் முறிந்ததுள்ளது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதை மின் ஊழியர்கள் மாற்றி நேற்று மதியம் பணியை முடித்துள்ளார். சற்று நேரத்திலேயே மினிலாரி மோதி, அந்த மின்கம்பம் முறிந்தது.
செய்தி மற்றும் போட்டோஸ்
மணவை முருகன்
"புதிய புயல்" இதழ்
மணவாளக்குறிச்சி
















No comments