அரபிக்கடலில் புயல் சின்னம் காரணமாக கனமழையை எதிர்கொள்ள குமரி மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம் வடநேரே தெரிவித...
அரபிக்கடலில் புயல் சின்னம் காரணமாக கனமழையை எதிர்கொள்ள குமரி மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம் வடநேரே தெரிவித்துள்ளார்.

அரபிக்கடலின் கிழக்கு திசையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கியார் புயலாக மாறியுள்ளதால் அக்டோபர் 30-ம் தேதி வரை கனமழை மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்கள் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் 76 தாழ்வான பகுதிகளை கண்காணிக்க 12 மண்டல அளவிலான அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்து தயார் நிலையில் உள்ளது.
நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் கிராம மக்கள் 760 பேருக்கு உரிய பயிற்சிகள் வழங்கி இயற்கை இடர்காலங்களில் உடனடியாக தகவல் தெரிவிக்கவும், மக்களுக்கு தேவையான முதல் உதவிகள் செய்யவும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரம் இயங்கும். அனைத்து துறைசார்ந்த அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது. வானிலை எச்சரிக்கை மைய தகவல்கள் உடனுக்குடன் அறிவிக்கவும், பொதுமக்கள் புகார் குறித்து தகவல்கள் பெறவும், மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04652-231077 மற்றும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04652-227460 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
கனமழை எச்சரிக்கை தொடர்பாக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
















No comments