பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 2 நாட்களுக்குப் பிறகு, பான் கார்டு காலாவதியாகிவிடும் என்று கூறப்படுகிறது. பான் கார்டுடன் ஆத...
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 2 நாட்களுக்குப் பிறகு, பான் கார்டு காலாவதியாகிவிடும் என்று கூறப்படுகிறது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால், அக்டோபர் 1 முதல் பான் கார்டு செல்லுபடி ஆகாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது. அதன் பிறகு புதிதாக விண்ணப்பித்தே பான் கார்டு பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு பான் கார்டு அவசியம். இந்நிலையில் பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை மேலும் ஒருங்கிணைக்க பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெரும்பாலானோர் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினர். அதைத் தொடர்ந்து பலமுறை அதற்கான காலக்கெடு தளர்த்தப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 30-க்குள் தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கு மேலும் கால அவகாசம் அளிக்க வாய்ப்பில்லை.
எனவே, செப்டம்பர் 30-க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டு காலாவதியாகிவிடும் என்று கூறப்படுகிறது.
பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?
- https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng என்ற பக்கத்தை க்ளிக் செய்யுங்கள்.
- அதில் பான், ஆதார் எண், ஆதாரில் உங்களின் பெயர், கேப்ட்சா ஆகியவற்றைப் பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.
- Link Aadhaar என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
- ஆதார் எண், பான் கார்டுடன் இணைக்கப்படும்
- நீங்கள் ஏற்கெனவே இணைத்திருக்கும் பட்சத்தில் கீழ்க்கண்ட குறுஞ்செய்தி வரும்.

இதன்மூலம் ஏற்கெனவே நீங்கள் ஆதார் எண் - பான் கார்டை இணைத்துவிட்டதை அறிந்துகொள்ளலாம்.
















No comments