தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் பல்வேறு நடவடி...
தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகளும் திறக்கப்பட்டு உள்ளன.

குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து குமரி மாவட்ட சுகாதார துறையினர் காய்ச்சல் பாதிப்பு எங்கெங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க ஆய்வு பணியில் இறங்கி உள்ளனர்.
மேலும் இத்தகைய காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறியவும் ஏற்பாடு செய்துள்ளனர். நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு திறக்கவும் ஏற்பாடு செய்தனர்.
சிறப்பு வார்டு அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று திறக்கப்பட்டது. அங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்து அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் இந்த வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.
















No comments