Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கணவனின் வருவாய், சொத்துகளை அபகரித்துவிட்டு, துரத்தியடித்த மனைவி மற்றும் குடும்பத்தார்...

கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு பகுதியில் வசிப்பவர் ஷகிலா ராணி (வயது 60). இவருக்கு முதல் கணவன் மூலம் பண்டாரம் என்ற மகனும், 2-வது கணவன் மூலம்...

கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு பகுதியில் வசிப்பவர் ஷகிலா ராணி (வயது 60). இவருக்கு முதல் கணவன் மூலம் பண்டாரம் என்ற மகனும், 2-வது கணவன் மூலம் மகள்களும், இருளப்பன் என்ற மகனும் உள்ளனர். ஷகிலா ராணியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் மாயாண்டி (வயது 57) சுமார் 12 வருடங்களுக்கு மேலாக, மனைவியிடம் பேசாமல் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
ஷகிலா ராணியின் முதல் கணவனின் மகனுக்கும், 2-வது கணவனின் முதல் மகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில், 2-வது மகளுக்கு வரன் பார்க்க துவங்கினர். இதற்காக அவர்களுக்கு வேண்டப்பட்ட பெண் புரோக்கர் ஒருவரிடம் கூறினர். அந்த புரோக்கர் பொய் சொல்வதில் பி.எச்.டி படிக்கும் மாணவர்களுக்கு பேராசிரியர் போன்ற வல்லமை படைத்தவர்.

இந்நிலையில், மார்த்தாண்டம் பகுதியில் வசித்த, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, நன்கு படித்த சசிகுமார் என்பவரை தேர்வு செய்து, அந்த குடும்பத்தினரிடம் பல்வேறு பொய்களை கூறி, நம்பவைத்து, சம்மதமும் வாங்கி கொண்டாள், அந்த புரோக்கர்.
தொடர்ந்து சசிகுமார், ஷகிலா ராணியின் மகளுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திலும், ஏகப்பட்ட தில்லுமுல்லு நடந்துள்ளது. அதாவது பெண்ணிற்கு 25 பவுன் நகை போடுவதாக கூறிவிட்டு, 12 பவுன் மட்டுமே போட்டுள்ளனர். திருமணம் முடிந்து மாமியார் வீடு வந்த கணவனுக்கு, பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தது. அதாவது, அந்த குடும்பம் சரியான ஏமாற்று பேர்வழி என. மேலும், தவறுகளை அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு, தப்பித்துகொள்ளும் மகாநடிப்பு குடும்பமாகவும் வலம் வந்துகொண்டு இருந்தது. ஆனாலும் சசிகுமார் அதை பெரிய அளவில் எடுத்து கொள்ளவில்லை.

பின்னர், சிலநாட்களில் சசிகுமார் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு பெறப்பட்ட சம்பளம் அனைத்தையும், மனைவியின் பெயருக்கே அனுப்பி வைத்தார். இதை பயன்படுத்திய மனைவி, அவள் பெயரிலேயே, அவள் ஊரில் சொத்து வாங்கினாள். கணவனும், மனைவி தானே என நம்பிக்கை வைத்தார். தொடர்ந்து சசிகுமாரின் சம்பளம் உயர்ந்தது. இதனால் மனைவி மற்றும் அவள் தாய் திட்டம் தீட்டி, அந்த இடத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டனர். கணவனும் மனைவியை முழுமையாக நம்பி ஒகே சொன்னார். வெளிநாட்டில் கணவன் கஷ்டப்பட்டு, வேலைபார்த்து, கடன் பெற்றும் வீடு கட்ட தேவையான பணத்தை அனுப்பினார்.
மனைவி பெயரில் வீடு ரெடியானது. கணவன் ஊர் வருவதற்கு முன்பே, வீட்டில் குடியேறினாள் மனைவி. அந்த குடியேறும் விழாவில், அவள் குடும்பத்தார்கள் மட்டுமே கலந்து கொள்ளுமாறும் பார்த்து கொண்டாள், அவள் தாய் ஷகிலா ராணி.

இந்நிலையில் இரு மாதங்களுக்கு பின்னர், கணவன் வெளிநாட்டில் இருந்து ஊர்வந்தார். தன் சொந்த ஊரில் இருந்த தன் அம்மாவையும், தன் பணத்தால் கட்டிய வீடு என்பதால், தன்னுடன் வந்து இருக்குமாறு அழைத்து வந்தார். ஒரு மாதம் மட்டுமே சசிகுமார் அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார். ஷகிலா ராணிக்கோ. அவள் மகளுக்கோ சசிகுமாரின் தாய், அந்த வீட்டில் இருப்பது துளிகூட விருப்பம் இல்லை. மேலும் கணவனையும் வெளிநாட்டிற்கு துரத்தி விடுவதிலேயே, அவர்கள் குறியாக இருந்தனர்.

அதற்காக, ஷகிலா ராணி, மகளிடம் பலவாறு பேசி, மனதை மாற்றி, சண்டைகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். சிறிய சண்டை சற்று பெரிய சண்டையாக உருவெடுத்தது. அப்போது, ஷகிலா ராணி, சசிகுமாரை பார்த்து, இந்த வீடு உன்னுடையது இல்லை என்றும், மகளின் வீடு என்றும் கூறி, தகாத வார்த்தை கூறி, சசிகுமாரின் மனதை நோகடித்தாள். அதோடல்லாமல், முதல் கணவனின் மகன் பண்டாரம் மூலம் சசிகுமாரை மிரட்டி, அடிக்கவும் செய்தனர். மேலும் ஷகிலா ராணியின் 2-வது கணவனின் தம்பி பிச்சையாண்டி (வயது 54), சசிகுமாரின் கையை பிடித்து முறித்து, தோள்பட்டையின் ஓங்கி அறைந்து தகாத வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளார்.
பாவம் சசிகுமார் அந்த ஊர் அவருக்கு புதுசு. எதுவும் செய்யமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். கட்டிய மனைவியும், குடும்பத்தார்களுடன் சேர்ந்து, அவர்கள் ஊரில் உள்ளவர்களிடம், அவர்கள் நல்லவர்கள் போலவும், சசிகுமாரை மிகவும் கீழ்த்தரமான கெட்டவர் போலவும் சித்தகரித்து கூறி நம்ப வைக்க முயற்சித்தனர். அதை சிலர் நம்பியிருக்கலாம். பலர் நம்பாமலும் இருந்திருக்கலாம். ஆனாலும், சசிகுமாருக்கு ஆறுதலாக, அந்த ஊரில் யாரும் இல்லை.

சசிகுமார், தன் உயிர்க்கு ஆபத்து என்று எண்ணிய நிலையில், தன் தாயாரையும் அழைத்து கொண்டு, தன் சொந்த ஊரான மார்த்தாண்டம் பகுதிக்கு வந்து, சிறிய அளவிலான வாடகை வீட்டில் குடியேறினார். தான் உழைத்த அனைத்தையும் இழந்து, அநாதை போல் உணர்ந்தார். ஆனாலும், அதை பற்றி நினைத்து கவலை கொள்ளாமல், தன் மனதை மாற்றி, வேறு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆகவே, திருமணம் முடிந்து மனைவி ஊரில் குடியேற முயற்சி மேற்கொள்ளும் ஆண்களே, நன்கு யோசனை செய்து, முடிவு செய்யவும். பின்னாளில் ஏற்படும் நம்பிக்கை துரோகத்தை ஏற்றுகொள்ளும் மனபக்குவம் உள்ளதா என பார்த்துகொள்ளவும். இந்த பதிவு எல்லா பெண்களையும் பற்றி அல்ல. கணவனை வஞ்சித்து ஏமாற்றும் மனைவிகளுக்கு மட்டுமே.

பாவப்பட்ட சசிகுமாரின் வாழ்க்கை இனிவரும் காலம் நல்லபடியாக அமைய, அவரை வாழ்த்துவோம்.

2 comments

  1. Some bad mothers ruin their daughter's life. They are not worried about daughter's future.

    ReplyDelete
  2. மனைவியின் ஊருக்கு சென்று செட்டில் ஆக முயற்சிக்கும், ஆண்களுக்கு இது ஒரு பாடம். எப்போதும் ஆண்கள், அவர்களின் ஊரிலேயோ அல்லது வேறொரு வாழ வசதியான ஊரிலேயோ இடம் வாங்கி செல்வது நல்லது. மனைவியை நம்பி சென்றால், மனைவி, அவள் குடும்பத்தார் யாருமே மதிக்க கூட மாட்டார்கள்.

    மனைவியால் ஓரம்கட்டப்பட்ட சசிகுமாரின் வருங்காலம் நல்ல முறையில் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள். இனிமேலும் இதுபோன்ற ஒரு தவறை, தன் வாழ்நாளில் சசிகுமார் செய்யாமல் இருப்பார் என்று நினைக்கிறேன்.

    ஜோசப் மேத்யூவ்
    மார்த்தாண்டம்

    ReplyDelete




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்