பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் 4ஜி சேவை நாகர்கோவில் நகர் முழுவதும் நாளை (ஆகஸ்ட் 22 – வியாழன்) முதல் தொடங்கப்படுகிறது. இது குறித்து பிஎஸ்என்...
பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் 4ஜி சேவை நாகர்கோவில் நகர் முழுவதும் நாளை (ஆகஸ்ட் 22 – வியாழன்) முதல் தொடங்கப்படுகிறது. இது குறித்து பிஎஸ்என்எல் நாகர்கோவில் முதன்மை பொதுமேலாளர் சஜூ குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக 4ஜி சேவை நாகர்கோவில் நகர் பகுதிகளில் நாளை முதல் தொடங்கப்படுகிறது. நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் அமைந்துள்ள தொலைபேசி நிலையத்தில் காலை 9.30 மணிக்கு, மாநிலங்களவை உறுப்பினரும், தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழுவின் தலைவருமான அ.விஜயகுமார், குமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் ஆகியோர் 4ஜி சேவையை தொடக்கி வைக்கின்றனர்.
இதன்மூலம் நாகர்கோவில் வாடிக்கையாளர்கள் 4ஜி ஸ்மார்ட் போன்களில் பிஎஸ்என்எல் 4ஜி சிம்களை பயன்படுத்தி அதிவேக டேட்டா சேவைகளை பெறலாம். ஏற்கனவே 3ஜி சிம் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் உடனடியாக 4ஜி க்கு மாற்றி சேவையை பெறலாம்.
இதற்காக, இலவச சிறப்பு 4ஜி சிம் மேளாக்கள் நாகர்கோவில் நீதிமன்ற சாலை, பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையம், கே.பி. சாலை மத்தியாஸ் வார்டு அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையம், வடசேரி, பார்வதிபுரம், இராமன்புதூர், கோட்டார் தொலைபேசி நிலையங்கள் ஆகியவற்றில் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 04652-279077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















No comments