சுற்றுலா பயணிகள் கருத்தை அறிந்த பின்னர், கன்னியாகுமரியில் கேபிள் கார் திட்டம் தொடங்கப்படும் என, முதலமைச்சர் உறுதியளித்து உள்ளதாக தமிழக அரச...
சுற்றுலா பயணிகள் கருத்தை அறிந்த பின்னர், கன்னியாகுமரியில் கேபிள் கார் திட்டம் தொடங்கப்படும் என, முதலமைச்சர் உறுதியளித்து உள்ளதாக தமிழக அரசின் சிறப்பு டில்லி பிரிதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலக வளாகத்தில் அண்ணா தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியபோது:-
கண்ணியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் ஆக்குவது, நீண்டகாலம் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது ஆகியவை குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கன்னியாகுமரியில் கேபிள் கார் திட்டம் அமைக்கப்படும் என்று, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவித்தார். இது தொடர்பாக சென்னையில் முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதில் குமரி கேபிள் கார் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாயும், ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதேபோல் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று தான் அழகை ரசிக்க விரும்புவார்கள் என்றும் நிர்வாகம் தெரிவித்தது. அப்போது இத்திட்டத்தில் சாதக, பாதகம் குறித்தும், சுற்றுலாப் பயணிகளின் கருத்தை அறிந்த பின்பே, இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் முடிவெடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார், என அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.அழகேசன், பேரூர் செயலாளர் பி.வின்ஸ்டன், அகஸ்தீஸ்வரம் பேரூர் பொறுப்பாளர் சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
















No comments