தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங...
தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிக்காக தமிழக அரசால் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கிறிஸ்தவ தேவாலயங்களிடம் இருந்து அதிகமான அளவில் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது, கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெற்றிருத்தல் கூடாது. வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறப்படவில்லை என்பதற்கான சான்றிதழ் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும்.
நடப்பு ஆண்டில் திருச்சி, திருவாரூர், கிருஷ்ணகிரி, குமரி, கடலூர், ஈரோடு, விருதுநகர், கோயம்புத்தூர், கரூர், விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 16 தேவாலயங்களுக்கு ரூ.39.62 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் பிறசேர்க்கையை பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கலெக்டரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறிஸ்தவ தேவாலயங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதி உதவி வேண்டி கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும்.
நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும் என்று சிறுபான்மையினர் நல ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
















No comments